Saturday, 16 August 2025

காஸா உக்ரைன் போர்

 

காஸா - உக்ரைன் போர்

சமீபத்தில் திரு. சுகி சிவம் அவர்கள் ஒரு பேட்டியில், ஒரு குழந்தையின் உயிர் காக்க 20 கோடி ரூபாயை மக்கள் இணைந்து கொடுத்து காப்பாற்றியுள்ளார்கள். இன்னொரு புறம், ஒரு குண்டைப் போட்டு 200 உயிர்களை எடுக்கிறார்கள் - என்றார். என்ன விசித்திரமான உலகம் இது?

காஸாவில், கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் போரில், முற்றிலும் பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான். அத்தியாவசிய தேவைகளைக் கூட பெற முடியாமல் அல்லல்படுகின்றனர். பசி, பட்டினி, பஞ்சத்தால் அழுகின்றனர். குழந்தைகளுக்கு கூட உணவு கிடைப்பதில்லை. பசியால் துடிக்கும் குழந்தைகளின் ரீல்களை, இன்ஸ்டாவில் பார்க்கும் போது நமக்கே நெஞ்சம் பதைபதைக்கிறது.

சமீபத்தில் ஒரு குழந்தை, பசிக்கு மண்ணை அள்ளி திண்ணும் வீடியோ வைரலானது. ஒரு தந்தை, ஒரு மாவு மூட்டையை தன் வீட்டிற்கு கொண்டு வந்ததும் குடும்பமே மகிழ்ந்தது. இது நடந்தது காஸாவில். இதே போன்ற நிலைதான் உக்ரைனில். இன்னும் பல குழந்தைகள் தினமும் பட்டினியால் உயிரிழக்கிறது அங்கே. மருத்துவ உதவிகளும் முழுமையாக கிடைப்பதில்லை. பலர், வீடுகளை இழந்து தெருவில் நிற்கின்றனர். இது போன்ற கொடுமைகள் இன்னும் எத்தனை நாளைக்கு? அவர்களின் கண்களில் வடிவத்து கண்ணீர் அல்ல,  இரத்தம்.



இன்னும் இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. காஸா மற்றும் உக்ரைனின் அரசியல்வாதிகள், தங்கள் கையில் அதிகாரங்கள் இருந்தும், சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள வாய்ப்பு இருந்தும், மக்கள் சாகட்டும் என்று வேடிக்கை பார்க்கின்றனர்.



ஒரு வினாடி இப்படியும் யோசிக்கத் தோன்றுகிறது, ஒரு வேளை அந்த நாட்டு அதிபர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் இப்படி ஒரு சூழலில் மாட்டிக்கொண்டு இருந்தால் இப்படி வேடிக்கை பார்ப்பார்களா?

நிச்சயமாக இல்லை. உடனடியாக போர் நிறுத்தங்களை அறிவித்து இருப்பார்கள்.

மக்கள் படும் வேதனைகளை தீர்ப்பதைப் பற்றி யோசிக்காமல், இன்னும் போரை நீட்டித்துக் கொண்டிருக்கும் இந்த அதிபர்கள் மனிதர்கள்தானா? இல்லை ராட்சஷர்களா?

ஐநா- வும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டு இருக்கிறது....

இருக்கும் பூமியில் அமைதியாக வாழத் தெரியாத மனிதன், நிலவுக்கும், செவ்வாய்க்கும் சென்று என்ன சாதிக்கப் போகிறான்?😥

வாழ்க்கை வாழ்வதற்கே...

No comments: