A.i...
இன்று இந்த வார்த்தை, பலருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வார்த்தையாகவும், சிலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் வார்த்தையாகவும் இருக்கும்.
ஏனென்றால், அறிவியலில் ஒரு மைல் கல்லாக கண்டுபிடிக்கப்பட்ட ஏ. ஐ, இன்று பல துறைகளிலும் கால் பதித்து வருகிறது. மனித இனத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து, உருவாக்கப்பட்ட இது, சிலரின் வாழ்வாதாரத்தை பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.
உதாரணம்: பல நாடுகளில், கணிசமான எண்ணிக்கையில் ஐ. டி துறையைச் சேர்ந்தவர்களின் வேலையைப் பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது போல, வேறு சில துறைகளிலும் பலர் தங்களது வேலையை இழக்கக் காரணமாக இருக்கிறது.
2025- ஐ A.i ன், குழந்தைப் பருவம் போல சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் இந்த வருடம்தான், இது உலகெங்கும் பிரபலமடைந்து அதிகளவில் சாமானிய மக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், ஆரம்ப நிலையிலேயே பலரின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்ட இந்த குழந்தை, இன்னும் சில மாதங்களில், வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்து மேல்மட்ட ஊழியர்களின் வேலை வாய்ப்பை உலகெங்கிலும் 70-80% பறித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதனால், பல பட்டப்படிப்புகள் பயனற்றுப் போக வாய்ப்பு உள்ளது. மேலும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வேறு எதிர் விளைவுகள் ஏற்படலாம் மனித இனத்தில்.
ஒரு வேளை, இப்படி நடந்தால் என்ன செய்வது?
வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒருவன், தொழில் நுணுக்கங்களை, தன் முதலாளியிடமே கற்றுக் கொண்டு, ஒரு கட்டத்தில் தனது முதலாளியின் கடைக்கு எதிரிலேயே கடை விரித்து, முதலாளியையே முடித்துக் கட்டினானாம்.
அந்தக் கதை போல நடந்தால் என்ன செய்வது? ஏனென்றால் இங்கே மனித இனம் தான் முதலாளி. A.i தான், வேலையாள்.
ஒரு வேளை, இது முதலாளியை மிஞ்சி விட நினைத்து விட்டால், அடுத்த நொடி நாம் எல்லோரும் அதற்கு அடிமையாகி விட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது உலகத்தை ஆளும் ஒரு வலுவான தலைவன், ஏ. ஐ ஆக இருக்கலாம்.
ஏனெனில் இன்று மனித இனம், இணையத்துடன் இணைந்த கம்ப்யூட்டரை நம்பித்தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் பேங்க் அக்கவுண்ட் முதல் ஆதாரத் தகவல்கள் வரை, நாடுகளின் பொருளாதாரத் தகவல்கள் முதல் இராணுவத் தகவல்கள் வரை இவற்றை நம்பித்தான் உள்ளோம். அவற்றை, ஒரு நொடியில் தனது சுய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அறிவும் வல்லமையும், ஏ.ஐ க்கு உண்டு.
எனவே, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி, ஏ. ஐ யால் ஏற்படப்போகும் மாற்றங்களை ஆய்வு செய்து, தொழில் ரீதியாக மனிதர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்காத வகையில் வரன்முறைகளையும், சட்டங்களையும் உருவாக்கி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
என்னைக் கேட்டால், மனித ஊழியர்களுக்கு மாற்றாக அவற்றை தொழில் ரீதியாக (மனித வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில்) ஒவ்வொரு துறையிலும், பயன்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி, தடை விதிக்க வேண்டும்.
இல்லையேல்,
ஐ ரோபட் - வில் ஸ்மித்தும்
டெர்மினேட்டர் - அர்னால்டும்
டாக்டர் வசீகரனின் ரஜினிகாந்த் (சிட்டி) - ம்
மனித குலத்திற்கு உதவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். 😂😂😂
#ஏஐ #சிட்டி #AI #robotics #jobopportunity #ending #JudgmentDay #terminator #iRobot #Endhiran #robo2.0

.webp)
No comments:
Post a Comment